பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
கூடலூர்
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூட பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார துணைத் தலைவர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். பொருளாளர் ரவிக்குமார் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் சஜி, செயலாளர் செந்தில்குமார், பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் பொறுப்பாளர் பிரதீப் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story