முப்பெரும் விழா
கடையம் அருகே முப்பெரும் விழா நடைபெற்றது
கடையம்:
கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. திருமலையப்பபுரம் டாக்டர் அமீர்ஜான் தலைமை தாங்கினார். பிரைமரி பொருளாளர் பீர்முகமது வரவேற்றார். நெல்லை ஷிபா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் முகமது ஷாபி, தென்காசி மாவட்ட பொருளாளர் மடத்துப்பட்டி ஊராட்சி தலைவர் செய்யது இப்ராகிம், நெல்லை மாவட்ட வக்கீல் அணி பொறுப்பாளர் மதார் முகைதீன், நெல்லை மாவட்ட பொருளாளர் கானகத்து மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அரசு வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றினார். கடையம் ஒன்றிய வக்கீல் அணி பொறுப்பாளர் பீர்முகம்மது நன்றி கூறினார்.
முன்னதாக நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பிரைமரி தலைவர் இக்பால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். தொகுதி அமைப்பாளர் யஹ்யா வரவேற்றார். நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் நெல்லை மாமன்ற உறுப்பினர் ஆபீஸ் முகமது அப்துல் காதர், ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முஹம்மது உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.