பெரிய களுங்கி தடுப்பணை நிரம்பியது


பெரிய களுங்கி தடுப்பணை நிரம்பியது
x

பெரிய களுங்கி தடுப்பணை நிரம்பியது.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள சுற்றுலா தலமான புளியஞ்சோலை அய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் சமீப காலமாக பெய்து வரும் தொடர் மழையால், கொல்லிமலையில் இருந்து வரும் சிற்றாறுகளின் தண்ணீர் புளியஞ்சோலையில் அய்யாற்றில் பெருக்கெடுத்து ஓடி, அப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீராதாரமாக சென்றடைகிறது. தற்போது அய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பி.மேட்டூர் பெரிய களுங்கி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story