குறை தீர்வு நாள் கூட்டத்தில் 286 மனுக்கள் குவிந்தது
திருப்பத்தூரில் நடந்த குறை தீர்வு நாள் கூட்டத்தில் 286 மனுக்கள் குவிந்தது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்ம் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்கள் கலந்துகொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 286 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன குமரன், உதவி ஆணையர் (கலால்) பானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story