மளிகை கடைக்காரர் பலி


மளிகை கடைக்காரர் பலி
x
தினத்தந்தி 8 Dec 2022 12:30 AM IST (Updated: 8 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

எரியோடு அருகே பள்ளத்தில் ஸ்கூட்டர் விழுந்து மளிகை கடைக்காரர் பலியானார்.

திண்டுக்கல்

எரியோடு அருகே உள்ள ராஜபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 48). மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம், ஸ்கூட்டரில் கருத்தனம்பட்டிக்கு சென்றார். பின்னர் அங்கு இருந்து ஊருக்கு கோவிலூர்- ஆர்.புதுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். ஆர்.பி.பள்ளபட்டி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் ஸ்கூட்டர் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story