திட்டக்குடியில் சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு வேறு பெண்ணுடன் திருமணம் புதுமாப்பிள்ளைக்கு போலீஸ் வலைவீச்சு


திட்டக்குடியில்  சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு வேறு பெண்ணுடன் திருமணம்  புதுமாப்பிள்ளைக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடியில் சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்


ராமநத்தம்,

திட்டக்குடியில் உள்ள ஒரு மளிகை கடையில் பெரம்பலூர் மாவட்டம் வயலப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். சிறுமியை பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலையை சேர்ந்த முகேஷ் என்பவர் காதலிப்பதாக கூறி, பேசி பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த போது, சிறுமி தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைகேட்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

வேறு பெண்ணுடன் திருமணம்

மருத்துவமனையில் இருந்து கொடுத்த தகவலின் அடிப்படையில் திட்டக்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபா லெட்சுமி நேரில் சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர், சிறுமி கர்ப்பத்திற்கு காரணமான எறையூரை சேர்ந்த முகேஷ் பற்றி போலீசார் விசாரித்தனர். அதில் அவருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் வேறு ஒரு பெண்ணுடம் திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முகேசை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story