குளம்போல் மாறிய மைதானம்


குளம்போல் மாறிய மைதானம்
x

குளம்போல் மாறிய மைதானம்

திருப்பூர்

உடுமலை

உடுமலையில் பெய்த பலத்த மழையினால் விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

மழை

உடுமலையில் கடந்த ஒருவாரமாக தினசரி சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேலாக மழைபெய்து வந்தது.நேற்று முன்தினம் மாலை பலத்தமழை கொட்டியது. இது 50மி.மீ.மழை பெய்ததாக பதிவாகியுள்ளது.

உடுமலையில் பெய்த பலத்த மழையினால் பழைய பஸ்நிலையம் பகுதியில்பொள்ளாச்சி சாலை, பழனிசாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.நீண்ட நேரத்திற்கு பிறகு, சாலையில் ஓடிய தண்ணீர் வடிந்தது.உடுமலையில் நேற்று பகலில் வெயில் அடித்தது. மாலையில் மேகமூட்டமாக இருந்தது.

இந்த நிலையில்பழைய பஸ்நிலையம் முதல் திருப்பூர் சாலை சந்திப்புவரை கழிவு நீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நேற்று தீவிரமாக நடந்தது. இதுதவிர மழைதண்ணீர் வழிந்தோடும் வகையில்பல்வேறு பகுதிகளிலும் தூர்வாரும் பணிகள் நடந்தது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் மு.மத்தீன், ஆணையாளர் பி.சத்தியநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

விளையாட்டு மைதானம்

உடுமலை கல்பனா சாலையில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆக்கி, கால்பந்து, கைபந்து,

கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவார்கள். மிகப்பெரிய விளையாட்டு மைதானமான இந்த மைதானத்தின் ஒருபகுதியில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது.அதனால் கால்பந்து விளையாட்டுக்கான அந்த இடத்தில் தற்போது விளையாடமுடியாதநிலை உள்ளது. மழை நீர் தேங்காத மைதானத்தில் வீரர்கள்விளையாடி வருகின்றனர். அதனால் அங்கு மழைத்தண்ணீர் தேங்கிநிற்கும் இடத்தில் மண் கொட்டி சமன்படுத்த வேண்டும் என்பது விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Next Story