நோயாளிக்கு சிகிச்சை அளித்த காவலாளி


நோயாளிக்கு சிகிச்சை அளித்த காவலாளி
x

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காவலாளி சிகிச்சை அளித்தது வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அரசு மருத்துவமனையில் பணியாற்றும் காவலாளி சுரேஷ் என்பவர் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து ஆம்பூர் அரசு மருத்துவமனை அலுவலர் ஷர்மிளா தேவியிடம் கேட்ட போது இந்த சம்பவம் இரவில் நடந்துள்ளது. இதற்கான விளக்கத்தை மருத்துவமனை தலைமை செவிலியரிடம் கேட்டுள்ளேன். விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இச்சம்பவத்தால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story