வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசம்


வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசம்
x

களக்காடு அருகே வைக்கோல் படப்பு தீயில் எரிந்து நாசமானது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை குண்டேந்திரன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). விவசாயி. இவர் தனது இடத்தில் வைக்கோல் படப்பு வைத்திருந்தார். நேற்று மதியம் அந்த வைக்கோல் படப்பில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் நாங்குநேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அதிகாரி பாபநாசம் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கிருந்த 200 வைக்கோல் கட்டுகளும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




Next Story