பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை- விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் சோக முடிவு


பள்ளி தலைமை ஆசிரியை  விஷம் குடித்து தற்கொலை-  விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் சோக முடிவு
x

ஆலங்குளம் அருகே, விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே, விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தலைமை ஆசிரியை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பிரபு. இவருடைய மனைவி செல்வராணி எஸ்தர் (வயது 50).

இவர் ஆலங்குளத்தை அடுத்த கோவிலூற்றில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி செய்து வந்தார். இவருடைய மகள் வர்ஷினி சமீபத்தில் விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

மகளின் நினைவாகவே இருந்து வந்த செல்வராணி எஸ்தர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயக்கம் அடைந்துள்ளார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் வந்து அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செல்வராணி எஸ்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் மகள் இறந்த துக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை விஷம் குடித்து சோகமுடிவை தேடிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.



Next Story