தலைமை ஆசிரியருக்கு, முதல்-அமைச்சர் நினைவு பரிசுகள் வழங்கி பாபாட்டினார்


தலைமை ஆசிரியருக்கு, முதல்-அமைச்சர்  நினைவு பரிசுகள் வழங்கி பாபாட்டினார்
x

ஜோலார்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியருக்கு, முதல்-அமைச்சர் நினைவு பரிசுகள் வழங்கி பாபாட்டினார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் ஐ.ஆஜம். 2016-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக இவர் பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. பள்ளியின் தேர்ச்சி வீதமும் 100 சதவீதத்தை எட்டியது. இதனால் அரசு மேல்நிலைப் பள்ளியாக இருந்த இந்த பள்ளி கடந்த ஆண்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் 1,200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தூய்மையான சுற்றுச்சூழல், சுகாதாரமான உணவு, குடிநீர் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இருந்து இணை இயக்குனர் (பயிற்சி) வை.குமார் பள்ளியை ஆய்வு செய்து பாராட்டி சென்றார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நம்ம ஸ்கூல் திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அப்போது கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றிய ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜமை பாராட்டி, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

இதனை அடுத்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன் உள்ளிட்ட நிர்வாகிகள், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், தலைமை ஆசிரியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story