ஹீட்டர் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்தது


ஹீட்டர் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்தது
x

பொன்னையில் ஹீட்டர் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்தது.

வேலூர்

பொன்னை பஜார் பெரிய தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 65). ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவருக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டில் அண்ணன், ஒரு மகனுடன் வசித்து வருகிறார். தினமும் காலையில் வீட்டில் ஹீட்டரை பயன்படுத்தி தண்ணீர் சுடவைத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல தண்ணீர் காய்ச்சும்போது பயங்கர சத்தத்துடன் ஹீட்டர் வெடித்துள்ளது. இதில் தீ பிடித்து வீட்டிற்கு மேலே சென்ற மின்சார ஒயரில் பற்றியது. ஓட்டு வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட ஜெயராமன் கூச்சலிட்டுள்ளார்.

உடனே அப்பகுதி பொதுமக்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ வீடு முழுவதும் பரவி முற்றிலும் எரிந்தது. இதுகுறித்து காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் வீடு முழுவதும் எரிந்து விட்டது. ஹீட்டர் வெடித்து தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story