சாத்தான்குளத்தில் ஊர் வழிகாட்டி பலகையை திருத்தி அமைத்த நெடுஞ்சாலைத்துறையினர்
சாத்தான்குளத்தில் ஊர் வழிகாட்டி பலகையில் இருந்த தவறை நெடுஞ்சாலைத்துறையினர் திருத்தி அமைத்துள்ளனர்.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளத்தில் இருந்து வள்ளியூர் சுமார் 38 கி.மீ. தூரம் உள்ளது. ஆனால் சாத்தான்குளம் கோர்ட்டு அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஊர் வழிகாட்டி பலகையில் 26 கி.மீ தூரம் என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதியில் இருந்து வள்ளியூர், நாகர்கோவில் பகுதிக்கு வாகனத்தில் செல்பவர்கள் குழப்பம் அடையும் நிலை உள்ளது என வியாபாரிகள் சங்கத்தினர், பா.ஜனதாவினர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் ஊர் பெயர் பலகையில் தவறுதலாக குறிப்பிடப்பட்டு இருந்த தூரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் 38 கி.மீ என திருத்தி அமைத்தனர். இதற்கு சாத்தான்குளம் வியாபாரிகள் சங்கத்தினர், பா.ஜனதாவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story