வழிப்பறியில் ஈடுபட்டவர் சிக்கினார்
பாளையங்கோட்டையில் வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் பிடித்தனர்
திருநெல்வேலி
சேரன்மாதேவியை சேர்ந்தவர் தளவாய் (வயது 34). ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் மெயின் ரோடு பகுதியில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது வி.எம் சத்திரம் இமானுவேல் காலனியை சேர்ந்த சுதாகர் (22) என்பவர், தளவாயை வழிமறித்து பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகரை நேற்று கைது செய்தனர். மேலும் வி.எம் சத்திரம் பரணி நகர் பகுதியில் கடந்த 27-ந்தேதி இரவு வி.எம் சத்திரம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (72) என்பவரின் வீட்டின் முன்பக்க கிரில் கேட்டை உடைத்து திருட முயன்ற வழக்கிலும் சுதாகரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story