கோரிக்கை மனு அனுப்ப முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்ப முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சீர்காழி:
சீர்காழியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயற்கை வளத்தை சுரண்டும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும், மதம் மாறியவர்களுக்கு இந்து சாதி சான்றிதழ் வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் மூலம் மனுக்களை அனுப்ப முயன்றனர். இதை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் பாலாஜி, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி நிர்வாகி தனசேகரன், நகர தலைவர் ராஜ்மோகன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து, அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.