பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குரோஸ் கருந்திரிகள் பறிமுதல்


பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குரோஸ் கருந்திரிகள் பறிமுதல்
x

அருப்புக்கோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பெண் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பெண் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

கருந்திரி பறிமுதல்

அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் கருந்திரிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டவுன் சப்-இன்ஸ்பெக்டர்கள் தாமரைக்கண்ணன், ஜோதி முத்து, நாகராஜ பிரபு, அசோக்குமார் தலைமையில் போலீசார் தெற்குத்தெரு, எம்.டி.ஆர். நகர், சொக்கலிங்கபுரம், மேட்டு தெரு, ஜோதிபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்புடைய பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் 52,500 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்தனர்.

9 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக லோகநாதன் (வயது63), விஜயகுமார் (46), செல்வராஜ் (58), ராமசாமி (68), வீரராஜன் (62), பாலமுருகன் (51), பாண்டிகணேசன் (55), முருகேஸ்வரி (60) ஆகிய 8 ேபரை கைது செய்தனர்.

அதேபோல தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கட்டங்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணேசன் (53) என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story