ரெயில் தண்டவாளம் வழியாக இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்


ரெயில் தண்டவாளம் வழியாக இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவலம்
x

லால்குடியை அடுத்த வாளாடியில் ரெயில் தண்டவாளம் வழியாக இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மயானத்துக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

லால்குடி,ஆக.25-

லால்குடியை அடுத்த வாளாடியில் ரெயில் தண்டவாளம் வழியாக இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மயானத்துக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெயில் தண்டவாளம்

லால்குடி அருகே உள்ளது வாளாடி கிராமம். இந்த கிராமத்தில் திருச்சியில் இருந்து அரியலூர் வழியாக சென்னை செல்லும் ரெயில்வே தண்டவாளங்கள் உள்ளன. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்கள் இந்த வழியாக தான் சென்று வருகிறது.

இந்த கிராம மக்களுக்கான மயானம் டி.வளவனூர் செல்லும் சாலையில் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் உள்ள ரெயில் தண்டவாளம் வழியாக தினமும் 44 ரெயில்கள் சென்று வருகிறது.

இதனால் பிணத்தை ரெயில் தண்டவாளத்தை கடந்து தூக்கிசெல்லும் போது, அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இறந்தவர்களின் உடலை தூக்கிக்கொண்டு ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரெயில் வந்தால் ரெயில் செல்லும் வரை காத்திருக்க வேண்டும்.

ஒரு சில நேரங்களில் இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் போது, அப்பகுதியில் சரக்கு ெரயில் நிறுத்தப் பட்டிருக்கும். அந்த சமயங்களில் பொதுமக்கள் இறந்தவரின் உடலை தூக்கி செல்வதில் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.

மாற்று இடம் ஒதுக்கி தர கோரிக்கை

ஒவ்வொரு முறையும் இறுதி ஊர்வலத்தின் போது இப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே ெரயில் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். எனவே வாளாடி கிராம மக்களின் நலன் கருதி ரெயில் தண்டவாளத்திற்கு முன்பே மயானத்திற்காக மாற்றுஇடம் ஒதுக்கிதர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story