ஏ.டி.எம்.மில் விட்டுச்செல்லப்பட்ட பணத்தை போலீசில் ஒப்படைத்த ஓட்டல் உரிமையாளர்


ஏ.டி.எம்.மில் விட்டுச்செல்லப்பட்ட பணத்தை போலீசில் ஒப்படைத்த ஓட்டல் உரிமையாளர்
x

ஏ.டி.எம்.மில் விட்டுச்செல்லப்பட்ட பணத்தை போலீசில் ஒப்படைத்த ஓட்டல் உரிமையாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரை சேர்ந்தவர் நல்லபூவான்(வயது 33). இவர் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அந்த ஏ.டி.எம்.மில் அவருக்கு முன்பாக பணம் எடுக்க வந்த ஒருவர், எந்திரத்தில் ரூ.10 ஆயிரத்தை எடுக்காமல் விட்டு சென்றுள்ளார். அந்த பணத்தை நல்ல பூவான் எடுத்துக்கொண்டு, பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும் அந்த பணத்துக்கு உரியவரை கண்டுபிடித்து, அவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து நல்ல பூவானை போலீசார் பாராட்டினர். மேலும் ஏ.டி.எம்.மில் பணத்தை விட்டுச்சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story