நள்ளிரவில் வீடு இடிந்து விழுந்து விபத்து
ஆம்பூர் அருகே நள்ளிரவில் வீடு இடிந்து விழுந்தது.
திருப்பத்தூர்
ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் ஊராட்சி கம்மகிருஷ்ணப் பள்ளி பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 70). இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் இதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இஸ்மாயிலின் வீட்டின் பெரும்பாலான பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இஸ்மாயில் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே படுத்து உறங்கி உள்ளனர். இதனால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story