திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது - ஆர்.எஸ்.பாரதி பேட்டி


திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது -  ஆர்.எஸ்.பாரதி பேட்டி
x

மனித உரிமைகளை மீறும் வகையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூரில் உள்ள அவரது இல்லங்களில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

5 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைபோல அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


முந்தைய அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது ,

திட்டமிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை .அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்பவே அமைச்சரின் வீட்டில் சோதனை. மனித உரிமைகளை மீறும் வகையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக - பாஜக இடையே மோதலை திசை திருப்பும் வகையில் சோதனை. என தெரிவித்தார்.


Next Story