காதல் மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு


காதல் மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

காதல் மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்


விக்கிரவாண்டி அருகே உள்ள கொய்யாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 27), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (26). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2014-ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கார்த்தி, அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி லட்சுமியிடம் உங்கள் வீட்டில் சீர்வரிசை ஏதும் செய்யவில்லையே என்று கேட்டு திட்டி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லட்சுமி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கார்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story