பாகுபலி யானையின் உடல்நிலை குறித்து வனத்துறை வெளியிட்ட தகவல்


பாகுபலி யானையின் உடல்நிலை குறித்து வனத்துறை வெளியிட்ட தகவல்
x

பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், பாகுபலி காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கூடுதல் பாதுகாப்புக்காக வந்த வனப்பணியாளர்கள் அந்தந்த வனச்சரங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

2 மோப்ப நாய்களும் போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அரசு மரக்கடங்கு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகள் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் மேற்பார்வையில் பத்திரமாக லாரியில் ஏற்றப்பட்டு மீண்டும் முதுமலை புலிகள் காப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டன.



Next Story