காயமடைந்த லாரி டிரைவர் சாவு


காயமடைந்த லாரி டிரைவர் சாவு
x
தினத்தந்தி 31 May 2023 12:30 AM IST (Updated: 31 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் காயம் அடைந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள குட்டியப்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 34). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் குட்டியப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். தோமையார்புரம் அருகே அவர் வந்தபோது, வாகனங்களின் வேகத்தை குறைக்க சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சரவணகுமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரவணகுமார் நேற்று இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான சரவணகுமாருக்கு ராதிகா (25) என்ற மனைவியும், சசிகுமார் (5) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story