விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு


விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
x

திசையன்விளை அருகே விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள கன்னங்குளத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 70), நாகமல் (65). கூலி தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மன்னார்புரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாகமல் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story