நிரந்தர மக்கள் கோர்ட்டு உத்தரவால் காப்பீடு பணம் கிடைத்தது


நிரந்தர மக்கள் கோர்ட்டு உத்தரவால் காப்பீடு பணம் கிடைத்தது
x

நெல்லையில் நிரந்தர மக்கள் கோர்ட்டு உத்தரவால் காப்பீடு பணம் கிடைத்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் வடக்கு சுபம் காலனியைச் சேர்ந்த சையத் குலாம் தஸ்தகீர், நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், நெல்லையில் உள்ள ஒரு கம்பெனியில் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.94 ஆயிரத்து 965-க்கு மோட்டார் சைக்கிள் வாங்கினேன். கடந்த செப்டம்பர் மாதம் கிருஷ்ணாபுரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த வாகனம் மோதியது. தொடர்ந்து போலீஸ் நடவடிக்கைக்கு பிறகு மோட்டார் சைக்கிளை சரிசெய்வதற்காக அந்த நிறுவனத்தில் விட்டேன்.

விபத்து காப்பீடு கோருவதாகவும், மோட்டார் சைக்கிளை சரி செய்வதாகவும் அந்த நிறுவனத்தினர் கூறினர். தொடர்ந்து ரூ.22 ஆயிரத்து 550 செலுத்தி மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டேன். பின்னர் அவர்கள், விபத்து காப்பீட்டு தொகையை தர மறுத்தார்கள். எனவே விபத்து காப்பீட்டுத்தொகையை பெற்று தர வேண்டும் என்று கூறி வந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சமீனா, அந்த நிறுவன மேலாளருக்கு சம்மன் அனுப்பினார். மேலாளர் ஆஜராகி ரூ.17 ஆயிரத்து 925 சையத்குலாம் தஸ்தகீர் வங்கி கணக்கில் செலுத்துவதாக தெரிவித்தார். அதன்படி அவருடைய வங்கி கணக்கில் அந்த பணம் செலுத்தப்பட்டது.


Next Story