இயற்கையை பாதுகாப்பதில் நீதித்துறை, வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும்-ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு


இயற்கையை பாதுகாப்பதில் நீதித்துறை, வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும்-ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
x

இயற்கையை பாதுகாப்பதில் நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறினார்.

நீலகிரி

ஊட்டி


இயற்கையை பாதுகாப்பதில் நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறினார்.

கருத்தரங்கு

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை தொடர்பாக வன அலுவலர்களுக்கான கருத்தரங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் மாளிகையில் நடந்தது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதில் ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஸ்குமார், வி.பவானி சுப்பராயன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறியதாவது:- 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். இயற்கையை பாதுகாப்பதில் நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயல்பட வேண்டும். வனப்பகுதிகள் நீர் நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் வழங்கப்படும் அனைத்து தீர்ப்புகளும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனை அடிப்படையாக கொண்டே வழங்கப்படுகிறது. இதனை முறையாக பின்பற்றி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மண் வளம் பாதிப்பு

இதையடுத்து ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் கூறியதாவது:-நாம் இயற்கையை தெய்வமாக போற்றி அதனை பாதுகாக்க வேண்டும். அன்னிய தாவரங்கள் வளர்ச்சியால் எவ்வாறு வன, வளம் பாதிக்கப்படுகிறது மற்றும் அவற்றை அகற்றுவதன் அவசியம் குறித்து தெரிந்து கொள்வதோடு, நீலகிரி மாவட்டத்தில் வளரக்கூடிய மரங்களை அதிகளவில் நடவு செய்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் ஆர்.ஸ்ரீதரன், தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ரவீந்திரன், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சையத் முஜம்மில் அப்பாஸ், மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காரம் மற்றும் சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வனத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இதைத்தொடர்ந்து ஊட்டி பிரத்தால்ஹோல் மந்து பகுதியில் தோடர் இன மக்களுக்கு, தனியார் நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் அவர்களது பாரம்பரிய நடனத்தையும் பார்வையிட்டார்.


Next Story