கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
குளச்சலில் 2-வது நாளாக கடல்சீற்றம் ஏற்பட்டது. இதனால், கட்டுமர மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
குளச்சல்:
குளச்சலில் 2-வது நாளாக கடல்சீற்றம் ஏற்பட்டது. இதனால், கட்டுமர மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன்பிடிக்க தடை
குமரி மேற்கு கடற்கரை பகுதியில் தற்போது கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடித்து வருகின்றன.
இந்தநிலையில் குளச்சல் கடல் பகுதியில் குளச்சலில் 2-வது நாளாக கடல்சீற்றம் ஏற்பட்டது. இதனால், கட்டுமர மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.குளச்சலில் 2-வது நாளாக கடல்சீற்றம் ஏற்பட்டது. இதனால், கட்டுமர மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.குளச்சலில் 2-வது நாளாக கடல்சீற்றம் ஏற்பட்டது. இதனால், கட்டுமர மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டது.
2-வது நாளாக...
நேற்று 2-வது நாளாக கடல் சீற்றம் நீடித்தது. ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் மணற்பரப்பில் விழுந்து சென்றன. குறிப்பாக குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான கட்டுமரங்கள், வள்ளங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. அவை பாதுகாப்பாக மேடான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஒரு சில கட்டு மரங்கள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க சென்றன. அவற்றில் குறைவான அளவு நெத்திலி மீன்களே கிடைத்தன. அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் குளச்சலில் நேற்று மீன் வரத்து குறைந்தது. மீன்கள் வாங்க வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.