கோவிலான் தரைப்பாலம் உள்வாங்கியது


கோவிலான் தரைப்பாலம் உள்வாங்கியது
x

திருநகரி ஊராட்சியில் கோவிலான் தரைப்பாலம் உள்வாங்கியது ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே உள்ள திருநகரி ஊராட்சியில் அத்தடி சாலை பகுதியில் உள்ள கோவிலான் தரைப்பாலம் உள்வாங்கியதால்,அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சீர்காழி ஒன்றிய பொறியாளர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் இந்த தரைப்பாலத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் திருநகரி ஊராட்சியில் அத்தடி சாலை மிகவும் முக்கியமான சாலை ஆகும். இதன் வழியே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தினந்தோறும் சென்று வருகின்றனர். இந்த சாலையில் உள்ள கோவிலான் தரைப்பாலம் மழையின் காரணமாக ஒரு பகுதியில் உள்வாங்கியது. மேலும் எந்த நேரத்திலும் மதகு உடையும் அபாயம் உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தரைப்பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.



Next Story