குரும்பர்களை, குருமன்ஸ் இன பட்டியலில் சேர்க்க வேண்டும்
குரும்பர்களை, குருமன்ஸ் இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் வலியுறுத்தப்பட்டது.
ராணிப்பேட்டை
இருமத்தூர் ஐ.வி.எல். பள்ளியின் தாளாளரும், எஸ்.டி. பிரிவு மாநில செயலாளருமான கோவிந்தராஜ் டெல்லியில் பழங்குடியினர் நலத் துறை மந்திரி அர்ஜூன் முண்டாவை சந்தித்தார். அப்போது குருமன்ஸ் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கையான குரும்பர், குருமன், குரும்பா இன ஒத்தபெயர்களை குருமன்ஸ் என தீர்மானம் நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தார். மேலும் தமிழ்நாடு பழங்குடியினர் அணியின் பொறுப்பாளர் அசோக், எம்.பி.நேத்தே, எஸ்.டி. அணியின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவப்பிரகாசம் ஆகியோரையும் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.
இவர்களுடன் எஸ்.டி. அணியின் துணைத்தலைவர் பண்பு, புலவர் ரமேஷ், குருமன்ஸ் பாதுகாப்பு பேரவை துணைத்தலைவர் வஜ்ஜிரம், குருமன்ஸ் பாதுகாப்பு பேரவை இளைஞர் அணி தலைவர் உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story