கூலித்தொழிலாளி பலி
கூலித்தொழிலாளி பலி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பொய்யுண்டார்கோட்டை காராமணிதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராமன் (வயது42). கூலித் தொழிலாளி. இவர் தீபாவளி தினத்தன்று பக்கத்து ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, பிறகு தனது வீட்டிற்கு செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்தநிலையில் அன்று இரவு பொய்யுண்டார்கோட்டை மழவராயர்தெரு அருகே பொன்ராமன் சாலையில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் பொன்ராமனை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் பொன்ராமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்ராமனின் மனைவி ராஜாத்தி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த பொன்ராமன் தவறி கீழே விழுந்து இறந்தாரா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.