கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி-அண்ணன் கண் எதிரே சோகம்


கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி-அண்ணன் கண் எதிரே சோகம்
x

பெத்தநாயக்கன்பாளையம் அருகே அண்ணன் கண் எதிரே, கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்:

அண்ணன்-தம்பி

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மகன்கள் செல்வம் (வயது 32), கார்த்திக் (33). இவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் டிங்கரிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இவர்கள் நேற்று விடுமுறை என்பதால் தங்களின் தந்தையை பார்க்க பெத்தநாயக்கன் பாளையத்துக்கு வந்துள்ளனர்.

அங்கு மதியம் சாப்பிட்டு விட்டு பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஓலப்பாடி பகுதியில் உள்ள கிணற்றுக்கு நீச்சல் பழக சென்றுள்ளனர். அங்கு செல்வம், அவருடைய தம்பி கார்த்திக் மற்றும் செல்வத்தின் மகன் சச்சின் ஆகியோர் குளிப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளனர்.

பலி

அப்போது நீச்சல் தெரியாததால் கார்த்திக் கிணற்று நீரில் மூழ்கி பலியானார். இது தொடர்பாக தகவல் கிடைத்ததும், ஏத்தாப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குளிக்க சென்ற போது, அண்ணன் கண் எதிரே தம்பி கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story