குந்துமாரனப்பள்ளி ஏரி நிரம்பியது
கெலமங்கலம் அருகே 22 ஆண்டுகளுக்கு பிறகு குந்துமாரனப்பள்ளி ஏரி நிரம்பியது. இதனால் கிராம மக்கள் ஆடு வெட்டியும், ஏரியில் தெப்பம் விட்டும் வழிபட்டனர்.
ராயக்கோட்டை
கெலமங்கலம் அருகே 22 ஆண்டுகளுக்கு பிறகு குந்துமாரனப்பள்ளி ஏரி நிரம்பியது. இதனால் கிராம மக்கள் ஆடு வெட்டியும், ஏரியில் தெப்பம் விட்டும் வழிபட்டனர்.
குந்துமாரனப்பள்ளி ஏரி நிரம்பியது
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக இந்த ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்தொடங்கியது.
இதையடுத்து நேற்று குந்துமாரனப்பள்ளி ஏரி நிரம்பி உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேறியது. 22 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் கிராம மக்கள் அங்கு திரண்டு பார்த்தனர். இதனிடையே நேற்று கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் ஏரிக்கரைக்கு சென்றனர். அவர்கள் கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து கிராம மக்கள் ஆடு வெட்டி பூஜை செய்து ஏரியில் பூக்கள் கொட்டினர்.
தெப்பம் விட்டு வழிபாடு
இதில் முக்கிய நிகழ்வாக கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட பெரிய தெப்பத்தில் சாமிகளை வைத்து மேளதாளங்களுடன் ஏரியை சுற்றி வந்தனர். பின்னர் இந்த தெப்பத்தை ஏரியில் விட்டு வழிபட்டனர். இதில் ஏராளமான கிராம மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சைவம் உணவுகள் பரிமாறப்பட்டன. 22 ஆண்டுகளுக்கு பிறகு குந்துமாரனப்பள்ளி ஏரி நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.