ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா தொடங்கியது


ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா தொடங்கியது
x

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா தொடங்கியது

திருவாரூர்

வருகிற 22-ந்தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா தொடங்கியது.

குருப்பெயர்ச்சி விழா

நீடாமங்கலம் அருகே ஆலங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சிவிழா அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது.இவ்வாண்டும் குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வருகிற 22-ந்தேி பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற உள்ளது.

லட்சார்ச்சனை விழா

விழாவையொட்டி குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

உற்சவர் தட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர்.

இதில் திருப்பனந்தாள் காசிமடம் இளைய சன்னிதானம், அறநிலைய உதவி ஆணையர் மணவழகன், கோவில் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற 20-ந்தேதி வரை முதற்கட்ட லட்சார்ச்சனையும், மீண்டும் குருப்பெயர்ச்சிக்கு பின் வருகிற 27-ந்தேதி முதல் அடுத்தமாதம் (மே) 1-ந்தேதி வரை 2-ம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story