லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது


லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது
x
சேலம்

மேச்சேரி:-

நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வரர் கோவில் தேர் நிலையை அடைந்தது. இன்று இரவு சத்தாபரணம் நடக்கிறது.

நங்கவள்ளி

சேலம் மாவட்டம் நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வரர் கோவிலில் கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

5 நாட்கள் நடைபெறும் தேரோட்டம் கடந்த 6-ந் தேதி கோவில் முன்பு இருந்து தொடங்கியது. முதலில் விநாயகர் தேரும், 2-வது தேரில் சோமேஸ்வரர் சவுந்தரவல்லி அம்பாளும், பெரிய தேரில் லட்சுமி நரசிம்ம சாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்துடன் தேரோட்டம் புறப்பட்டது.

நிலையை அடைந்தது

தேர், தாரமங்கலம் பிரிவு சாலை, பஸ் நிலையம், தோப்புத் தெரு வழியாக கோவில் முன்பு நிலையை அடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் மின்விளக்குகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு வாணவேடிக்கையுடன் சத்தாபரணம் நடக்கிறது.


Next Story