லால்குடி டிரைவர் உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது
லால்குடி டிரைவர் உடல் விமானம் மூலம் திருச்சி வந்தது
திருச்சி
லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). இவர் சவுதி அரேபியாவில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி சவுதி அரேபியால் பணியில் இருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இது பற்றிய தகவல் மனோகரனின் மனைவி மோட்ச மேரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் தனது கணவரின் உடலை மீட்டு தருமாறு எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் உதவியை நாடினார். இதைத்தொடர்ந்து அவர்களது முயற்சியில் மனேகரனின் உடல் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டு மோட்சமேரியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story