தூய்மை பணியாளர்கள் முன்பு தரையில் மண்டியிட்டு நன்றி தெரிவித்த தலைவர்


தூய்மை பணியாளர்கள் முன்பு தரையில் மண்டியிட்டு நன்றி தெரிவித்த தலைவர்
x

நன்றி தெரிவித்த தலைவர்

ஈரோடு

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி மாக்கினாங்கோம்பை. இந்த ஊராட்சியின் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் அம்மு கே.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரத்தினம் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சத்தி ஊராட்சி ஒன்றிய துணைவட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமணி, ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜம்மாள், அரசூர் தி.மு.க. பிரமுகர் அம்மு கே.பூபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஸ்வநாதன், பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், 100 நாள் வேலைவாய்ப்பு பணியாளர்கள், சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சி பற்றியும், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது ஊராட்சி தலைவர் அம்மு கே.ஈஸ்வரன் எழுந்து நின்று பேசுகையில், 'தூய்மை பணியாளர்கள் சேவை மகத்தானது. அவர்களை கவுரவிக்க சொல்லி அரசு அறிவித்து உள்ளது. கொரோனா காலத்தில் உங்கள் சேவையை மிகவும் போற்றத்தக்து ஆகும். ஆகவே அரசு அறிவித்ததற்கு ஒரு படி மேலாகவே உங்கள் சேவையை பாராட்டி நான் உங்களை வணங்கி வாழ்த்துகிறேன்,' என கூறியதுடன், அவர் தூய்மை பணியாளர்கள் முன்பு தரையில் மண்டியிட்டு வணங்கி நன்றி தெரிவித்தார். ஊராட்சி தலைவரின் இந்த செயல் அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


Next Story