விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்
x

தட்டார்மடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடத்தில் கடந்த 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விடுதலை சிறத்தைகள் கட்சி சார்பில் கட்சி கொடி கம்பம் நட்டி கொடியேற்ற முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடியேற்ற வந்த போது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்ெபக்டர் பவுலோஸ் தலைமையிலான போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் நேற்று விடுதலைசிறுத்தைகள் கட்சியினர், தட்டார்மடம் பஜாரில் கட்சி கொடி கம்பம் அமைக்க போலீசார் அனுமதி மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முரசு தமிழப்பன் தலைமையில் மாநில துணை பொதுச் செயலர் கலைவேந்தன், நாடாளுமன்ற தொகுதி செயலர் வழக்குரைஞர் ராஜ்குமார், ஒன்றிய செயலர்கள் ஜெயராமன், செந்தில், ஒன்றிய பொருளாளர் சுந்தர், ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலர் திருவள்ளுவன், நாசரேத் நகர செயலர் பாஸ்கர்தாஸ் உள்ளிட்ட பலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அக்கட்சியை சேர்ந்த 11 பெண்கள் உள்ளிட்ட 35 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.


Next Story