பழையகாயலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பழையகாயலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்:
பழையகாயல் காந்திநகர் ஆதிதிராவிடர் மக்கள் மீது திட்டமிட்டு தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் சமூக விரோத கும்பலை கண்டித்தும், இந்த கும்பல் மீது வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பழையகாயல் பஜாரில் மாவட்ட செயலாளர் முரசுதமிழப்பன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார். ஸ்ரீவைகுண்ட ஒன்றிய துணை செயலாளர் கனிபாண்டியன், செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் வனவளவன், நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மணிகண்டராசா, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, தென்திருப்பேரை நகர செயலாளர் அய்யப்பன், திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.