வேங்கை வயல் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வேங்கை வயல் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேங்கை வயல் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி

ஊட்டி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் க.சகாதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மண்ணரசன், குன்னூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் சுதாகர், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட அமைப்பாளர் காஞ்சனா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஊட்டி நகர செயலாளர் தம்பி இஸ்மாயில், ஒழுங்கு நடவடிக்கை குழு மாநிலத் துணைச் செயலாளர், பாவேந்தன், கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாநில துணைச் செயலாளர் இளவரசன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு, துணை செயலாளர் குடியரசு, கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாநில துணை செயலாளர் கோல்ட்ரஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story