பண்ணாரி சோதனை சாவடிக்கு வந்த ஒற்றை யானை
சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனை சாவடிக்கு ஒற்றை யானை வந்தது.
ஈரோடு
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் போலீஸ் துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை, வனத்துறை என 4 சோதனை சாவடிகள் உள்ளன. வனப்பகுதியில் 4 சோதனை சாவடிகளும் அமைந்துள்ளதால் அடிக்கடி யானைகள் இங்கு வந்துவிடுகின்றன. சில நேரங்களில் சோதனை சாவடியில் உள்ள பொருட்களை எடுத்து கீழே போட்டு மிதித்து நாசப்படுத்தி விடுகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் காட்டுக்குள் இருந்து ஒரு ஒற்றை யானை பண்ணாரி சோதனை சாவடிக்கு வந்தது. யானையை பார்த்ததும், பணியில் இருந்த ஊழியர்கள் பதறி அடித்து வெளியே ஓடினார்கள். அந்த வழியாக வந்த வாகனங்கள் சோதனை சாவடியை கடந்து செல்ல முடியாமல் சற்று தூரத்திலேயே நின்று கொண்டன. சிறிது நேரம் கழித்து யானை தானாக காட்டுக்குள் சென்றுவிட்டது.
Related Tags :
Next Story