டீசல் இல்லாததால் சாலை நடுவில் நின்ற லாரி


டீசல் இல்லாததால் சாலை   நடுவில் நின்ற லாரி
x

டீசல் இல்லாததால் சாலை நடுவில் நின்ற லாரி

திருப்பூர்

முத்தூர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தென்னை மட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று முத்தூருக்கு புறப்பட்டு வந்தது. இந்த லாரி நேற்று காலை 7 மணிக்கு முத்தூர் - நத்தக்காடையூர் சாலை ஸ்ரீராம் நகர் பிரிவு உள்வட்ட சாலையில் திரும்பிய போது திடீரென்று லாரி சாலையின் நடுவில் குறுக்காக நின்று விட்டது.

இதனை தொடர்ந்து லாரி டிரைவர் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வேறு இடத்தில் லாரியை கொண்டு நிறுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் லாரியில் டீசல் முழுவதும் தீர்ந்து விட்டதால் என்ஜின் பகுதியில் கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதானல அந்த சாலையில் வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.ஆனால் அந்த வழியாக இலகுரக வாகன போக்குவரத்து சீராக நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து லாரி டிரைவர் உடனடியாக பெட்ரோல் பங்கிற்கு விரைந்து சென்று கேனில் டீசல் வாங்கி வந்து லாரியை ஸ்டார்ட் செய்து இயக்கி வேறு இடத்தில் கொண்டு சென்று நிறுத்தினார். இதன்பின்பு போக்குவரத்து சீராக நடைபெற்றது



Next Story