சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி நின்ற லாரி


சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி நின்ற லாரி
x
தினத்தந்தி 24 Feb 2023 12:30 AM IST (Updated: 24 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி லாரி மோதி நின்றது.

திண்டுக்கல்


சேலத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). லாரி டிரைவர். இவர் தனது லாரியில் சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு இரும்பு தகடுகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் கருக்காம்பட்டி அருகே வந்த போது, எதிரே திடீரென வந்த ஒரு கார் சாலையின் குறுக்காக சென்றது.

இதைப்பார்த்த லாரி டிரைவர், கார் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் ஏறி அங்குள்ள மண்மேட்டில் மோதி நின்றது. இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் சண்முகம் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story