தவறாக நடக்க முயன்ற லாரி டிரைவர் கைது


தவறாக நடக்க முயன்ற லாரி டிரைவர் கைது
x

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தவறாக நடக்க முயற்சி

காவேரிப்பாக்கத்தை அடுத்த களத்தூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் 36 வயது பெண். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் மேட்டுத் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் பாலாஜி (வயது 26) என்பவர், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தூங்கி கொண்டிருந்தவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். உடனே அந்த பெண்ணின் புடவையை வாயில் தினித்துள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு கணவர் மற்றும் மகன் ஆகியோர் எழுந்து வந்துள்ளனர். அதற்குள் பாலாஜி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

லாரி டிரைவர் கைது

அப்போது அவர், கூச்சலிட்டு என்னை காட்டி கொடுத்து விட்டாய், உன்னை அடையாமல் விடமாட்டேன் என எச்சரிக்கை செய்து விட்டு தப்பித்து சென்றுள்ளார். இதுகுறித்து பாலாஜியின் வீட்டுக்கு சென்று கேட்டபோது, நான் அப்படித்தான் செய்வேன் எனக் கூறி அந்த பெண்ணின் கன்னத்தில் அடித்து, இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் காயம் அடைந்தவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது அவளூர் போலிசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story