காங்கயம் அருகே லாரி சாலையின் மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.


காங்கயம் அருகே லாரி சாலையின் மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
x

காங்கயம் அருகே லாரி சாலையின் மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பூர்

காங்கயம்,

காங்கயம் அருகே லாரி சாலையின் மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து உப்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சத்தியமங்கலத்துக்கு காங்கயம் - சென்னிமலை வழியாக சென்று கொண்டிருந்தது. லாரியை அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித் (27) என்பவர் ஓட்டிவந்தார். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் காங்கயம்-சென்னிமலை சாலை, ஆலாம்பாடி பகுதியில் உள்ள கூட்டுறவு பால் கொள்முதல் மையம் அருகே வந்து கொண்டிருந்த போது, இந்த லாரி எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று சாலையின் மைய தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் லாரியின் முன் சக்கரங்கள் இரண்டும் தனியாக கழன்று ஓடியது, மேலும் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அதிஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் காயங்களின்றி உயிர் தப்பினார். பின்னர் இதுகுறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற போக்குவரத்து போலீசார் இடர்பாடுகளை அகற்றி வாகனங்கள் செல்ல வழிவகை செய்தனர்.

பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைத்து, லாரியை சங்கிலிகள் மூலம் பிணைக்கப்பட்டு, லாரியை அலேக்காக தூக்கி சாலையின் ஓரத்திற்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. பின்னர் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சேதமடைந்த சாலையின் மைய தடுப்பு இடிபாடுகளை அகற்றி, வாகன போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.



Next Story