கீழ்மட்ட ரெயில்வே பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
கீழ்மட்ட ரெயில்வே பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
பேராவூரணி அருகே ரெயில்வே கீழ்மட்ட பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்மட்ட ரெயில்வே பாலம்
திருவாரூர் முதல் காரைக்குடி வரை அகல ெரயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து, இந்த வழிதடத்தில் பயணிகள் ெரயில் சென்று கொண்டிருக்கிறது, குறிப்பாக பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி இடையே பல்வேறு உயர்மட்ட பாலங்கள், கீழ்மட்ட பாலங்கள் ெரயில்வே துறையினரால் அமைக்கப்பட்டது. பேராவூரணி அருகே சொர்ணக்காடு கிராமத்திற்கு செல்லும் வழியில் ெரயில்வே கீழ் மட்ட பாலம் பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு அந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து மற்றும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை தற்போது வரை உள்ளது.
மழைக்காலங்களில் மழை நீர் இந்த சுரங்கப்பாதைக்குள் நிரம்பி விடுவதால் இந்த வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் அருகே ெரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து அந்த வழியாக தற்போது சென்று வருகிறது.
பாலம் பணிகள் முடியவில்லை
இதன் அருகே சிறு, சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலங்களில் சிறிய அளவு மழை பெய்தாலே மழை நீர் இந்த பாதைக்குள் முழுவதும் தேங்கி விடுவதால் இதன் வழியாக விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல் மற்றும் கடலை, உளுந்து, எள் போன்ற தானியங்களை எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ெரயில்வே துறையினரால் பேராவூரணி அருகே ஆண்டவன் கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பல கோடி ரூபாயில் ெரயில்வே கீழ்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பணிகள் இன்னும் முடியவில்லை.
விரைந்து முடிக்க வேண்டும்
மழைக்காலங்களில் மழை நீர் இந்த கீழ்மட்ட பாலத்தில் நிரம்பினால் மழை நீரை அப்புறப்படுத்த வடிகால் வசதி அமைக்கப்பட்டுள்ளதா? என ெரயில்வே துறை அதிகாரிகள் பணி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். இதன் வழியாக ஆத்தாளூர், நாடாக்காடு, பூக்கொல்லை, கழனிவாசல் போன்ற பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். தற்போது இந்த பால பணிகள் நடைபெறுவதால் விவசாயிகள் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய சூழல் உள்ளது.
ஆத்தாளூர் பகுதியில் புகழ்பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு மாவடுக்குறிச்சி, தென்னங்குடி, கொன்றைக்காடு, களத்தூர், கிராம மக்கள், பக்தர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்ய இவ்வழியே வந்து செல்வது வழக்கம்.
தற்போது பால பணிகள் முடிவு பெறாத நிலையில் ெரயில்வே பாலத்தை கடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ெரயில்வே துறையினர் இந்த கீழ்மட்ட ரெயில்வே பால பணிகளை விரைந்து முடித்து, மழைக்காலங்களில் மழை நீர் இப்பாலத்தில் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.