கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு
பள்ளியை அரசே ஏற்று நடத்த உத்தரவிடக் கோரிய தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த்தது
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தின் போது சிதைந்து போன பள்ளியை சீரமைப்பது தொடர்பான அனுமதியை வழங்கி மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் உத்தரவிட்டார்.
சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் மனுவில் எந்த தகுதியும் இல்லை .நியாமான காரணம் இல்லை'என கூறி கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த உத்தரவிடக் கோரிய தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது