இளமையாக்கினார் கோவிலில் சிலைகள் மாயம்


இளமையாக்கினார் கோவிலில் சிலைகள் மாயம்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் இருந்த 2 சிலைகள் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர்

சிதம்பரம்

சிதம்பரத்தில் பழமை வாய்ந்த சிவ தலங்களில் ஒன்றான இளமையாக்கினார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் இருக்கும் சோமன மண்டபத்தில் உள்ள ரிஷி கோபுரத்தில் கருங்கல்லால் செய்யப்பட்ட திருநீலகண்டர் மற்றும் அவரது மனைவி ரத்தின அம்மையார் சிலைகள் இருந்தன. இந்த இரு சிலைகளும் ¾ அடி உயரம் கொண்டவை ஆகும். இந்த நிலையில் கடந்த 6.1.2023 முதல் திருநீலகண்டர் மற்றும் ரத்தின அம்மையார் சிலைகள் மாயமானதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கோவிலின் பரம்பரை அறங்காவலர் பழனியப்பன், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். பழமை வாய்ந்த கோவில் சிலைகள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story