முக்கிய குற்றவாளி இரணியல் கோர்ட்டில் சரண்


முக்கிய குற்றவாளி   இரணியல் கோர்ட்டில் சரண்
x

முக்கிய குற்றவாளி இரணியல் கோர்ட்டில் சரண்

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் படுவாக்கரையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71). இவர் செம்பொன்விளை-திக்கணங்கோடு மெயின்ரோட்டில் நாட்டு மருத்துவ வைத்தியசாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி மாலை இவர் வைத்திய சாலையில் இருந்த போது அங்கு வந்த ஒரு வாலிபர் ஜார்ஜை தாக்கி கீழே தள்ளி விட்டு கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தனது கூட்டாளிகளுடன் தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அபிஷேக் (22), சுபின் (19), கார்த்திக் என்ற ஜோதி (29) மற்றும் சிவசங்கு (53) ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி மேற்கு கொடுப்பைக்குழி சிவா (27) தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலையில் சிவா இரணியல் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


Next Story