முருங்கைக்காய் பறித்தபோது காம்பவுண்டு சுவரில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


முருங்கைக்காய் பறித்தபோது காம்பவுண்டு சுவரில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
x

ராதாபுரத்தில் முருங்கைக்காய் பறித்தபோது காம்பவுண்டு சுவரில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பகவதி என்பவருடைய மகன் சுடலையாண்டி (வயது 43). இவருக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். இவர் தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள முருங்கை மரத்தில் காம்பவுண்டு சுவர் ஏறி முருங்கைக்காய் பறித்தபோது தவறி கீழே விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சுடலையாண்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் ராதாபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story