கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
தூத்துக்குடியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் சென்று கொண்டு இருந்த ஒருவரை தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் ஜெயக்குமார் (வயது 28) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டாராம். உடனடியாக போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story